வடியாத மழை நீர்; தவிக்கும் மாணவர்கள்: சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வடியாத மழை நீர்; தவிக்கும் மாணவர்கள்: சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 11-ம் தேதி இரவு  தொடங்கி 12-ம் தேதி காலை வரை மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில்  அதீத கனமழை பொழிந்தது. ஒரு நாள் மழை அளவாக 44 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.  அதன் விளைவாக சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதிகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது.  பல பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாத நிலையில் தொடர்ந்து நீடிக்கிறது.

அதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில்  பள்ளி,  கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது  பல  இடங்களில் தண்ணீர் வடிந்து விட்டாலும் சில குடியிருப்பு பகுதிகளில் புகுந்த தண்ணீர் இன்னமும் வடியாததால் அப்பகுதி மக்கள்  பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்படி பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்படுவதால்  சீர்காழி தாலுகாவில்  உள்ள பள்ளிகளுக்கு மட்டும்  இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in