மழை இல்லை; ஆனால், இந்த மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: காரணம் இதுதான்!

மூழ்கிக்  கிடைக்கும் பயிர்கள்
மூழ்கிக் கிடைக்கும் பயிர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கடந்த 11-ம் தேதி நள்ளிரவு  மயிலாடுதுறை மாவட்டத்தில் கரையேறியது. இதன் விளைவாக மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டத்தில் அதிக கனமழை பொழிந்தது. அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதேபோல மாவட்ட முழுவதுமே மிக அதிகபட்சமாக மழை கொட்டி தீர்த்தது. அதன் விளைவாக குடியிருப்புக்களில்  நீர் சூழ்ந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. வயல்கள், ஆறுகள், குளங்கள் போல காட்சியளிக்கின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இந்நிலையில்  பள்ளி, கல்லூரிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை  வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் இன்னும் முழுமை பெறாததால் மயிலாடுதுறை மாவட்டத்தில்  இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in