சீர்காழி தாலுகாவில் எட்டாம் வகுப்பு வரை இன்றும் விடுமுறை!

சீர்காழி தாலுகாவில் எட்டாம் வகுப்பு வரை இன்றும் விடுமுறை!

கனமழை பெய்ததன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு வந்த நிலையில் இன்றும் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை பெய்த அதீத கனமழையின்  விளைவாக மாவட்டம்  முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.  பல பகுதிகளிலும் இன்னும் வெள்ளம் வடியாத நிலையே நீடிக்கிறது.  சீர்காழியில் மிக அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பொழிந்து சீர்காழியே முழுகிப்போனது போல அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. நேற்றைய தினம் சீர்காழி வட்டத்தில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட  நிலையில்  இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான  வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

கனமழை பெய்த காரணத்தினால் பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சீர்காழி வட்டத்தில் உள்ள 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இன்று  ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், மாவட்டத்திலுள்ள மற்ற பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் லலிதா  அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in