தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 5,323 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 42,584 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 5,807 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று உயர்வினை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து 74.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 400 ரூபாய் உயர்ந்து 74,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in