தங்கம் மற்றும் வெள்ளியின் விலை - இன்றைய நிலவரம்!

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஆனாலும், தங்கத்தின் விலை ஒரு சவரன் 42 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,295 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 42,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து 5,776 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று சரிந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 74.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் குறைந்து 74,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in