தங்கத்தின் விலை மீண்டும் எகிறியது: இன்றைய நிலவரம்!

தங்கத்தின் விலை மீண்டும் எகிறியது: இன்றைய நிலவரம்!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை மீண்டும் கிராம் 5,300 ரூபாயைத் நெருங்கியுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 46 ரூபாய் உயர்ந்து 5,296 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 368 ரூபாய் உயர்ந்து 42,368 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 52 ரூபாய் உயர்ந்து 5,777 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 75 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் 1000 ரூபாய் உயர்ந்து 75,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in