
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து 5,228 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து 41,888 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து 5,712 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. அதனால் ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளி 74,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.