வெள்ளியின் விலை கிடுகிடு உயர்வு: தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. பண்டிகை காலங்களில் தங்கத்தின் விலை இன்னமும் உச்சத்திலேயே இருப்பதால், வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து 5,230 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து 41,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று ஒரு கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 5,705 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து 74 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 300 ரூபாய் அதிகரித்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in