தங்கம் மற்றும் வெள்ளி: இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் மற்றும் வெள்ளி: இன்றைய விலை நிலவரம் என்ன?

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஆனாலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை தொடர்ந்து 5,200 ரூபாய்க்கு அதிகமாக விற்பனையாகி வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து 5,237 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து 41,896 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 5,713 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை இன்று குறிப்பிடத்தக்க அளவில் சரிவினை சந்தித்துள்ளது. இதனால் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 1.20 குறைந்து 73.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,200 ரூபாய் குறைந்து 73,700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in