கடந்த இரு தினங்களாக ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சிறிய அளவில் குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மறுபடியும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்து 5,221 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து 41,768 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று ஒரு கிராமுக்கு 34 ரூபாய் உயர்ந்து 5,696 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. இதனால் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் உயர்ந்து 74.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 900 ரூபாய் உயர்ந்து 74,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.