தங்கம் மற்றும் வெள்ளியின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை
தங்கம் விலை

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. எனினும் தங்கத்தின் விலை 5,200 ரூபாயைத் தாண்டி விற்பனையாவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,228 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கமானது 41,824 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 1.50 குறைந்து 74 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,500 ரூபாய் குறைந்து 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in