தேசம்
தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு: அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. பண்டிகை காலத்தில் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 5,150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 41,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் இன்று உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து 74.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் உயர்ந்து 74,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.