இன்று குறைந்தது தங்கத்தின் விலை: வாடிக்கையாளர்கள் நிம்மதி!

இன்று குறைந்தது தங்கத்தின் விலை: வாடிக்கையாளர்கள் நிம்மதி!

நேற்று தங்கத்தின் விலை தடாலடியாக அதிகரித்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் விலை குறைந்து 4,658 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 240 ரூபாய் குறைந்து 37,264 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 60 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையாகிறது.

கடந்த இரு வாரங்களாகவே குறைந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று ஒரே நாளில் கிராமுக்கு 62 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4,688 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று சற்று தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in