தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நேற்று புதிய உச்சம் தொட்ட நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இரண்டே நாட்களில் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்தது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து 5,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 43,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் தடாலடியாக உயர்ந்தது. நேற்று புதிய உச்சமாக ஒரு கிராம் தங்கம் 5,505 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,040 ரூபாய்க்கும் விற்பனையானது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று சரிவினை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.1.40 குறைந்து 76.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,400 ரூபாய் குறைந்து 76,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் பட்ஜெட்டிற்கு பின்னர் நேற்று ஒரு கிராம் 77.80 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in