தங்கம் மற்றும் வெள்ளியின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை
தங்கம் விலைகிடுகிடுவென எகிறும் தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஆனாலும் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 5,375 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 43,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் தடாலடியாக உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,505 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,040 ரூபாய்க்கும் விற்பனையானது. அதன் பின்னர் சற்று குறைந்த தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்தது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி இன்று 50 காசுகள் குறைந்து 73.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் குறைந்து 73,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் மத்திய பட்ஜெட்டிற்கு பின்னர் ஒரு கிராம் 77.80 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in