தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது

தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இரண்டே நாட்களில் தடாலடியாக உயர்ந்த தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. மீண்டும் தங்கத்தின் விலை உயர்வதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து 5,373 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 42,984 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து 5,862 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் தடாலடியாக உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,505 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,040 ரூபாய்க்கும் விற்பனையானது. அதன் பின்னர் குறைந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் கடந்த 2 நாட்களாக மாற்றமில்லை. இதனால் ஒரு கிராம் வெள்ளி இன்று 74 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 74,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் பட்ஜெட்டிற்கு பின்னர் ஒரு கிராம் 77.80 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in