தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் உச்சம் தொட்டது: வாடிக்கையாளர்கள் கலக்கம்

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று மீண்டும் தடாலடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை மீண்டும் கிராம் 5,300 ரூபாயைத் தாண்டியுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 5,325 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 42,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 38 ரூபாய் உயர்ந்து 5,809 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 74.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 1000 ரூபாய் உயர்ந்து 74,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in