வெள்ளியின் விலை அதிகரித்தது: தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

தங்கம் வெள்ளி விலை நிலவரம்
தங்கம் வெள்ளி விலை நிலவரம்வெள்ளியின் விலை அதிகரித்தது: தங்கத்தின் விலை நிலவரம் என்ன?
Updated on
1 min read

ஆபரணத் தங்கம் இன்று சற்று குறைந்துள்ளது, அதே நேரத்தில் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. ஆனாலும் இப்போதும் தங்கத்தின் விலை 5,300 ரூபாயைத் தாண்டி விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,330 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 42,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து 5,814 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் தடாலடியாக உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,505 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,040 ரூபாய்க்கும் விற்பனையானது. அதன் பின்னர் படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று 50 காசுகள் உயர்ந்து 72.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் உயர்ந்து 72,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் மத்திய பட்ஜெட்டிற்கு பின்னர் ஒரு கிராம் 77.80 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in