தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
Updated on
1 min read

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 5,320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 42,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 60 ரூபாய் குறைந்து 5,682 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் தடாலடியாக உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5,505 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,040 ரூபாய்க்கும் விற்பனையானது. அதன் பின்னர் தற்போது படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தங்கத்தின் விலை குறைந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி இன்று 1 ரூபாய் குறைந்து 72.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 100 ரூபாய் குறைந்து 72,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் மத்திய பட்ஜெட்டிற்கு பின்னர் ஒரு கிராம் 77.80 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in