வெள்ளியின் விலை வீழ்ச்சி: தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

வெள்ளியின் விலை வீழ்ச்சி: தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், தங்கத்தின் விலை ஒரு சவரன் 42 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையாவதால் நகைப்பிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 5,290 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 42,320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 5,771 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலை இன்று குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.1.30 குறைந்து 73.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,300 ரூபாய் குறைந்து 73,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in