சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன், ரூ.44,240 க்கு விற்பனையாகிறது. ஆடி மாதம் முடிவடைய உள்ள நிலையில், தங்கத்தின் விலை குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,540 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 44,320 ரூபாய் ஆகவும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,530 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,240 ரூபாய் ஆக விற்பனையாகிறது.
இதே போல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 6,033 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 48,264 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதே சமயம் வெள்ளியின் விலையும் கிராமுக்கு 60 காசுகள் குறைந்து வெள்ளி 76.70 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.600 குறைந்து 76,700 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.