நகைப்பிரியர்களுக்கு நற்செய்தி... தங்கம் விலை குறைந்தது!

தங்கம்
தங்கம்
Updated on
1 min read

கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம், இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்
தங்கம்

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,515 ரூபாயாகவும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 5,985 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 47,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.77 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in