தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஆனாலும் தங்கத்தின் விலை கிராம் 5,300 ரூபாயைத் தாண்டி விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து 5,338 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் தங்கத்தின் விலை 96 ரூபாய் குறைந்து 42,704 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 5,823 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலையில் இன்று சற்று குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 74.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் உயர்ந்து 74,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in