மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வு!

தங்கம்
தங்கம்

கடந்த 2 தினங்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம் இன்று சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, 44,168 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம்
தங்கம்

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,510 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,521 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44,168 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து, 5,991 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து, 47,928 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.79.30 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 79,300 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு தினங்களாக விலை குறைந்து விற்பனையான தங்கம் இன்று மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in