தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்வினை சந்தித்துள்ளது. ஆனாலும் தங்கத்தின் விலை கிராம் 5,350 ரூபாயைத் தாண்டி விற்பனையாவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 5,350 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 42,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து 5,837 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. அதனால் ஒரு கிராம் வெள்ளி இன்று கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 74.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 400 ரூபாய் குறைந்து 74,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in