தங்கம் - வெள்ளி விலை நிலவரம்
தங்கம் - வெள்ளி விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளி வாங்கலாமா? - இன்றைய நிலவரம்!

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று மிகச்சிறிய அளவில் குறைந்துள்ளது. ஆனாலும், தங்கத்தின் விலை கிராம் 5,300 ரூபாயைத் தாண்டி விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 42,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,804 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 74.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் குறைந்து 74,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in