தங்கம் மற்றும் வெள்ளியின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஆனாலும் தங்கத்தின் விலை கிராம் 5,300 ரூபாயைத் தாண்டி விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5,345 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 42,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து 5,831 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. அதனால் ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளி 74,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in