தங்கத்தின் விலை தடாலடி உயர்வு: வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கிராம் 5,350 ரூபாயைத் தாண்டியுள்ளதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 32 ரூபாய் உயர்ந்து 5,355 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து 42,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 5,842 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 74 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 700 ரூபாய் குறைந்து 74,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in