குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப்4 தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப்4 தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடும். அதன்படி அடுத்த ஆண்டுக்கான (2023) தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகள் புதிதாக நடத்தப்படவில்லை. மாறாக, நடப்பு ஆண்டில் நடந்த குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு (2023) நவம்பரில் வெளியாகும் எனவும் அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் 4 தேர்வு 2024 பிப்ரவரியில் நடத்தப்படும் எனச் சொல்லப்பட்டாலும், அதில் எத்தனைகாலிப் பணியிடங்கள் உள்ளன என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

ஒருங்கிணைந்த பொறியியல் பாடங்களுக்கன தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காலிபணியிடங்கள் 828 ஆக இருக்கும். அதற்கான தேர்வு மே மாதம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in