குரூப்2 தேர்வில் குழப்பம் ஏன்?- டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

குரூப் 2 தேர்வு தொடங்கியது
குரூப் 2 தேர்வு தொடங்கியதுகுரூப்2 தேர்வில் குழப்பம் ஏன்?- டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் குரூப் 2 நடக்கும் தேர்வு மையங்களில் வினாத்தாளில் உள்ள பதிவு எண்கள் மாறி மாறி இருந்ததால், காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு தாமதமானது. இதன் காரணமாக கூடுதல் நேரம் வழங்கி டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5, 446 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 தேர்வு, முதன்மைத் தேர்வு இன்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் 57, 641 தேர்வர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் வினாத்தாளில் உள்ள பதிவு எண்கள் மாறி மாறி இருந்ததால், காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு தாமதமானது. ஒரு சில மையங்களில் இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டுத் தேர்வு தொடங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற சில மையங்களில் மாறியிருக்கும் பதிவு எண்களைச் சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் தேர்வர்கள் அறை கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

டிஎன்பிஎஸ்சி விளக்கம்
டிஎன்பிஎஸ்சி விளக்கம்குரூப் 2 தேர்வில் குழப்பம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

இதுத் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. அதில், “ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 2 (தொகுதி-2 & 2A)ன் முதன்மை எழுத்துத் தேர்வு இன்று (25.02.2023 முப & பிப) 20 மாவட்டத் தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. வருகைப் பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாட்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

தற்போது அந்த நிலைமை சரிசெய்யப்பட்டு, தேர்வு அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த காலதாமதத்தை ஈடுசெய்யும் வகையில் மதிய தேர்வு 2.30 மணிக்குத் தொடங்கி 5.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in