ஒரே மின் தடை: புகார் அளிக்க வந்த பொதுமக்கள் மீது மின் மீட்டரை வீசி தாக்கிய ஊழியர்!

ஒரே மின் தடை: புகார் அளிக்க வந்த பொதுமக்கள் மீது மின் மீட்டரை வீசி தாக்கிய ஊழியர்!

தருமபுரி மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு காரணமாக புகார் கூற வந்தவர் மீது மின் வாரிய ஊழியர் ஒருவர் மின்சார மீட்டரை வீசி தாக்க முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் தொடர்ந்து மின்வெட்டு நேரிடுவதாகவும், பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதாலும் அப்பகுதி மக்கள் பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். அப்போது பணியிலிருந்த நிலைய விற்பனையாளர் குப்புராஜ் அவர்களை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதை அங்கிருந்த ஒருவர் தன்னுடைய செல்போனில் பதிவு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குப்புராஜ் அங்கிருந்த மின் மீட்டரை எடுத்து அவர்கள் மீது வீசியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த மீட்டர் யார் மீதும் படவில்லை. இதைத் தொடர்ந்து அங்கிருந்த மற்ற அதிகாரிகள் ஓடிவந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினார்கள். அப்போது, ‘ஆபீசர் நான். வேணும்னா போட்டோ புடிச்சுக்க’ எனக் கூறி அவர்களிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in