காவலர் தேர்வு முடிவுகள் வெளியானது: தெரிந்து கொள்வது எப்படி?

காவலர் தேர்வு முடிவுகள் வெளியானது: தெரிந்து கொள்வது எப்படி?

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை வார்டன், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறையில் வார்டன், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான தேர்வு நவம்பர் 27-ல் நடந்தது.

மாநிலம் முழுவதும் காலியாக இருந்த 3, 552 காலி பணியிடங்களுக்காக நடந்த எழுத்து தேர்வினை மாநிலம் முழுவதும் இருந்து 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்நிலையில், இதன் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இம்முடிவுகளை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒருகாலி பணியிடைத்திற்கு 5 பேர் வீதம் உடற்தகுதிக்கு தேர்வுக்கு அழைக்கப்படுவர் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in