போலி செயற்கை கருத்தரிப்பு மைய சர்ச்சைகள்: சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

போலி செயற்கை கருத்தரிப்பு மைய சர்ச்சைகள்: சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

போலி செயற்கை கருத்தரிப்பு மையங்களை அடையாளம் காணும் வகையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாகக் கருத்தரிப்பு மையங்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சர்ச்சைகளில் சிக்கும் கருத்தரிப்பு மையங்களுக்குச் சீல் வைக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. அண்மையில் ஈரோடு சுதா மருத்துவமனை 16 வயது சிறுமியின் வயதை மாற்றி கருமுட்டை எடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மருத்துவமனையின் பதிவை ரத்து செய்ததுடன், அந்த ஸ்கேன் மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.  இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருத்தரிப்பு மையங்கள், வாடகைத் தாய் மையம் என நான்கு வகை மருத்துவ மையங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாகப் பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாயும், கருப்பையில் செலுத்த 50 ஆயிரம் ரூபாயும், வாடகைத் தாய் மையத்துக்கு இரண்டு லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். பதிவு கட்டணத்தை இணையத்தின் வாயிலாகச் செலுத்த வேண்டும். இதன் மூலம் போலி கருத்தரிப்பு மையங்கள் செயல்படாமல் தடுக்க முடியும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in