பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள்: பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு!

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள்: பட்டியலை வெளியிட்டது  தமிழக அரசு!

வடக்கு மண்டலத்தில் பணிபுரியும் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப் படைப் பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல் சென்னை, பரங்கிமலை துணை ஆணையர் டாக்டர் பிரதீப் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்ட 3 ஆண்டுகளில் 5-வது காவல் கண்காணிப்பாளர் பிரதீப் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவடி பட்டாலியன் சூப்பிரெண்டாக இருந்த டாக்டர் தீபக் ஷிவாட் பரங்கிமலை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்புக் காவல்படையில் பணிபுரிந்து வந்த சமாய் சிங் மீனா, சென்னை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக பணிபுரிந்து வந்த குமார், ஆவடி பட்டாலியன் சூப்பிரெண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in