சென்னை, திருவண்ணாமலை கொள்ளைச்சம்பவம் எதிரொலி: எல்லைப் பகுதிகளில் வாகனச்சோதனை தீவிரம்

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு
தமிழக டிஜிபி சைலேந்திர பாபுசென்னை, திருவண்ணாமலை கொள்ளைச்சம்பவம் எதிரொலி: எல்லைப் பகுதிகளில் வாகனச்சோதனை தீவிரம்

சென்னை நகைக்கடை கொள்ளை மற்றும் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் எதிரொலியாக தமிழ்நாடு  எல்லைப் பகுதிகளில் வாகனச்சோதனையை தீவிரப்படுத்தும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 75 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர வாகனத்தணிக்கை மற்றும் தனியார் விடுதிகளில் சோதனை நடத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் போலீஸாருடன் இணைந்து மாநில எல்லைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் தீவிர வாகனச்சோதனை செய்யவும், கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் தீவிர சோதனை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

வங்கிக் கொள்ளை மற்றும் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட பழையக் குற்றவாளிகளின் விவரங்களைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளவும், மாவட்ட எல்லைப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in