`உங்க செல்போனுக்கு இந்த மெசேஜ் வரும், பதில் அளிக்காதீர்கள்'- பொதுமக்களை அலர்ட் செய்யும் டிஜிபி

`உங்க செல்போனுக்கு இந்த மெசேஜ் வரும், பதில் அளிக்காதீர்கள்'- பொதுமக்களை அலர்ட் செய்யும் டிஜிபி

மின்சார கட்டணம் மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

மின்சார கட்டணம் மோசடி தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள் வீட்டில் மின்சாரம் கட்டணம் கட்டவில்லை, இன்றிரவுக்குள் உங்கள் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்படும், உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கூறி செல்போனிற்கு குறுந்தகவல் வரும். அதில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட உடன் நீங்கள் அப்டேட் செய்யவில்லை, மின்சார கட்டணம் செலுத்த நாங்கள் உதவி புரிகிறோம் எனக்கூறுவர்.

அதன் பிறகு மின்சார ஊழியர் ஒருவர் பேசுவது போல தொடர்பு கொண்டு உங்களது மின்சார எண், கட்டணம் உள்ளிட்டவற்றை நம்புவது போல கச்சிதமாக தெரிவித்து, நாங்கள் அனுப்பும் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து அதில் 10 ரூபாய் செலுத்தினால் போதும் இது போன்ற பிரச்சினை மீண்டும் ஏற்படாமல் பார்த்து கொள்வதாக உறுதி மொழி அளிப்பார்கள். இதனை நம்பி அந்த செயலி மூலமாக 10 ரூபாய் செலுத்தினால், உங்களது வங்கிக் கணக்கின் விவரங்களை அவர்கள் திருடி வங்கியில் உள்ள அனைத்து பணத்தையும் திருடி மோசடி செய்வார்கள் என குறிப்பிட்டுள்ளார். சமீபகாலமாக இதே போன்ற மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், இந்த மோசடி நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள டிஜிபி இது போன்ற மோசடி நபர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in