`நெல் கொள்முதல் காலத்தினை முன்னதாக தொடங்கவும்'- பிரதமரை வலியுறுத்தும் முதல்வர் ஸ்டாலின்

`நெல் கொள்முதல் காலத்தினை முன்னதாக தொடங்கவும்'- பிரதமரை வலியுறுத்தும் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் காலத்தினை முன்னதாக தொடங்க கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் இந்தாண்டு வேளாண்மைக்கு சாதகமான சூழல் நிலவுவதால் நெல் கொள்முதல் காலத்தினை அக்டோபர் 1-ம் தேதி தொடங்குவதற்கு பதிலாக செப்டம்பர் 1-ம் தேதி முதலே நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு உத்தரவிட வேண்டும். ஏற்கெனவே தமிழகத்தில் நெல் உற்பத்திக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் குளங்கள், ஆறுகள் தூர்வாரப்பட்டு சுமார் 4,964 கிலோ மீட்டர் அளவிற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி வருகிறது. எனவே குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்த பருவத்திற்கு ஏற்படுத்தி தர வேண்டும். நெல் கொள்முதலானது முன்கூட்டியே தொடங்கும் பட்சத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய எதுவாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in