`சவுதிக்கு வாங்க, பாஸ்போர்ட் ஏற்பாடு செய்கிறேன்'- பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்த திருவள்ளூர் வாலிபர் கைது

`சவுதிக்கு வாங்க, பாஸ்போர்ட் ஏற்பாடு செய்கிறேன்'- பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்த திருவள்ளூர் வாலிபர் கைது

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி திருவள்ளூரை சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ராஜா முகமது. இவர் திருவள்ளூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் கடந்த ஓராண்டாக வசித்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த 25-ம் தேதி அதிகாலையில் ராஜா முகமது இருந்த வீட்டில் புகுந்த சென்னை குற்றப்புலனாய்வு சிறப்பு பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, சவுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபரிடம் சிக்னல் என்ற செயலி மூலம் ராஜா முகமது பேசியிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து என்ஐஏ உள்ளிட்ட மத்திய உளவுத்துறை அமைப்புகள் இவரிடம் 18 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, சவுதிக்கு வரும்படியும், அதற்கான பாஸ்போர்ட் ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் ராஜா முகமதுவிடம் அந்த பயங்கரவாதி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நடந்து கொண்டதாக கூறி அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி திருவள்ளூரில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in