வெளிநாட்டுக்கு விளையாடச் சென்ற திருவள்ளூர் கைப்பந்து வீரர் திடீர் மரணம்: பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி செய்தி

வெளிநாட்டுக்கு விளையாடச் சென்ற திருவள்ளூர் கைப்பந்து வீரர் திடீர் மரணம்: பெற்றோருக்கு வந்த அதிர்ச்சி செய்தி

வெளிநாட்டுக்கு விளையாட சென்ற திருவள்ளுர் வாலிபால் வீரர் திடீரென மரணம் அடைந்தார். மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக திருவள்ளுர் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கைமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ். வாலிபால் வீரரான இவர் கோவையில் உள்ள யூத் ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் அசோசியேஷன் மூலம் கடந்த 21-ம் தேதி நேபாளத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காகசென்று இருக்கிறார். போக்ரா நகரில் நேற்று நடைபெற்ற கைப்பந்து போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தில் ஆகாஷ் வெற்றி பெற்று இருக்கிறார். பின்னர் ஓய்வறையில் இருந்த ஆகாஷ் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதை பார்த்து சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, ஆகாஷ் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆகாஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆகாஷ் மரணம் அடைந்தது குறித்து அவரது பெற்றோருக்கு பயிற்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படியும், மகனின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.

வெளிநாட்டுக்கு விளையாட சென்ற வீரர் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in