இன்று திருப்பதி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியது!

திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நவம்பர் மாத தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் திருப்பதி திருமலை கோயிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தபடியே இருக்கும்.

குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. ஒவ்வொரு மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்கூட்டியே ஆன்லைனில் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்படுகிறது.

அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான ரூ. 300 மதிப்புள்ள சிறப்பு தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கான அறை முன் பதிவு நாளை காலை 10 மணி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தரிசன டிக்கெட் மற்றும் தங்கும் அறைக்கான முன்பதிவு டிக்கெட்களை https://tirupatibalaji.ap.gov.in என்கிற இணையதளத்தின் மூலமாக பகேதர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் வேறு எந்த இணையதள பக்கத்தையும் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in