மின்சார வலையில் சிக்கிய புலி: வேட்டைக்காரர்கள் செய்த கொடூர செயல்

புலி
புலிமின்சார வலையில் சிக்கிய புலி: வேட்டைக்காரர்கள் செய்த கொடூர செயல்

மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள சஞ்சய் புலிகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் ஒரு பெண் புலி, வேட்டைக்காரர்களின் வலையில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

மத்திய பிரதேசத்தில் உள்ள சஞ்சய் புலிகள் சரணாலயத்தின் டி-32 என அழைக்கப்படும் பெண் புலி, தாம்சார் பாதுகாக்கப்பட்ட வன மண்டல பகுதியில் வேட்டைக்காரர்களால் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி மின்சாரம் தாக்கி் உயிரிழந்துள்ளது. மார்ச் 9 முதல்

இந்த புலியின் இருப்பிடத்தை அதன் காலர்-ஐடி மூலம் கண்காணிக்க முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர், கடைசியாக அந்த புலி இருந்த ஜிபிஎஸ் இருப்பிடத்தின் அடிப்படையில், அதனைத் தேட மோப்ப நாய்ப் படை ஒன்றை அனுப்பினார்கள்.

தீவிர தேடுதல் வேட்டைக்குக்குப் பின்னர், ஞாயிற்றுக்கிழமை கோபட் ஆற்றின் அருகே மணலில் புதைக்கப்பட்ட புலியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிரேத பரிசோதனை செய்ய பன்னா புலிகள் காப்பகத்திலிருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டதாக வனத்துறை கள இயக்குநர் அமித் குமார் கூறினார். புலியின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in