தேனீக்கள் கொட்டியதால் பிளிறி ஓடிய யானையால் பரபரப்பு... புலியைப் பிடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!

புலியைத் தேடிச் சென்ற யானைகள்.
புலியைத் தேடிச் சென்ற யானைகள்.

குடகில் புலியைப் பிடிக்கச் சென்ற காட்டுயானையை தேனீக்கள் கொட்டியது. இதனால் பீமன் என்ற யானை பிளிறிக்கொண்டு ஓடியதில் வனத்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.

கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம், பொன்னம்பேட்டை தாலுகாவில் உள்ள ஹரிஹரா கிராமத்தில் சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே உள்ள ஏரிக்கரையில் நேற்று இரவு புலி நடமாட்டத்தைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உணவு தேடி ஊருக்குள் புலி புகுந்து விட்டது என்ற செய்தி காட்டுத் தீ போல அந்தக் கிராமம் முழுவதும் பரவியது. அந்த ஊரில் உள்ள ஏரிக்கரை அருகே உள்ள பகுதியில் புலி பதுங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து புலியைக் கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இரவில் வனத்தை விட்டு வெளியேறி ஹரிஹரா கிராமத்திற்குள் நுழைந்துள்ள புலி, அருகில் உள்ள ஏரிப்பகுதியில் உள்ள கோட்டைக்குள் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு முழுவதும் கோயில் ஏரிக்கரை அருகே புலி உறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் பீதியில் இருந்தனர்.

இந்த நிலையில் புலியைப் பிடிக்க வனத்துறையினர், பழக்கப்பட்ட யானைகளுடன் ஹரிஹரா கிராமத்திற்கு இன்று வந்தனர். வன அலுவலர் கண்ணந்த ரஞ்சன், மவுத்த குல்லா தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், இரண்டு வளர்ப்பு யானைகளுடன் காட்டுப்பகுதியில் புலியைத் தேடினர்.

தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்த பீமா.
தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்த பீமா.

அப்போது ஒரு மரத்தில் இருந்த தேனீக்கள் திடீரென படையெடுத்து வந்து கொட்டியது. இதில் பீமா என்ற யானை பிளிறிக் கொண்டு ஓடியதில் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். தேனீக்கள் கொட்டியதில் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் புலியைப் பிடிக்கும் பணி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   


பிரபுதேவா பாட்டுக்கு நடனமாடி அசத்திய ராஜமெளலி...வைரலாகும் வீடியோ!

வைகோ மருமகன் பாஜகவில் இணைந்தார்... மதிமுகவினர் அதிர்ச்சி!

6 நிமிஷ வீடியோவுக்கு ரூ.60 கோடி செலவு... மாஸ் காட்டும் ‘புஷ்பா2’

அந்தரங்க வீடியோ வெளியாகி அதிர விட்ட நடிகை.... பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு!

குடிபோதையில் ஓட்டுநர்... பள்ளிப் பேருந்து கவிழ்ந்து 5 மாணவர்கள் உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in