புயல் எச்சரிக்கை... அடுத்த 3 மணி நேரத்தில் வெளுக்கப் போகும் மழை!

மழை
மழை

புயல் உருவாக உள்ளதால் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மழை நிலவரம்
மழை நிலவரம்

சென்னையில் இன்று அதிகாலை முதலே மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பணிக்குச் செல்வர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் ஏற்கெனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ’தேஜ்’ என்ற பெயரை வைக்க இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமடைந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

மழை
மழை

சென்னை மற்றும் சென்னையை சுற்றியிருக்கும் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதேபோல, ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், குன்றத்தூர், தாம்பரம், வண்டலூர் பகுகளிலும் பலத்த மழை வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. எழும்பூர், அமைந்தகரை, கிண்டி, மாம்பலம், மதுரவாயல், பூந்தமல்லி, அம்பத்தூர் பகுதிகளிலும், அடுத்த ஒரு மணி நேரத்தில் மழை பெய்ய போவதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in