காலை 10 மணி வரை டெல்டாவில் இடியுடன் மழை பெய்யும்!

டெல்டாவில் மழை
டெல்டாவில் மழைகாலை 10 மணி வரை டெல்டாவில் இடியுடன் மழை பெய்யும்!

நாகை, திருவாருர், தஞ்சை மற்றும் ராமநாதபுர மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் நூறு டிகிரியைத் தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் கோடை மழை நேற்று பெய்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்தது. இதன்படி, ஓரிக்கை, செவிலிமேடு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதேபோல், மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வெப்பத்தால் தவித்து வந்த மக்களுக்கு நேற்று பெய்த கோடை மழை குளிர்ச்சியான சூழலை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரத்தில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in