வெடித்து சிதறிய டயர்; தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல்: பறிபோன 4 பெண்களின் உயிர்கள்

வெடித்து சிதறிய டயர்; தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல்: பறிபோன 4 பெண்களின் உயிர்கள்

திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே டயர் வெடித்த ஒரு கார் அடுத்தடுத்து இரண்டு கார்களில் மோதிய விபத்தில் நான்கு பெண்கள் பலியான பரிதாப சம்பவம் இன்று மாலை நிகழ்ந்துள்ளது. 

மதுரையில் இருந்து இன்று மாலை திருச்சி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. துவரங்குறிச்சி அருகேயுள்ள  சிவந்தம்பட்டி என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்தது. அதனால் நிலை குலைந்து தாறுமாறாக ஓடிய கார்  எதிர் திசையில் வந்த இரண்டு கார்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக  மோதி விபத்துக்குள்ளாகியது. டயர் வெடித்த கார்  மற்ற கார்களின் மீது மோதி மூன்று முறை உருண்டது. மூன்று கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் ஒரு கார் முழுவதுமாக நசுங்கியது.

கார்களில் சிக்கியுள்ளவர்களை துவரங்குறிச்சி போலீஸார், பொதுமக்கள் உதவியுடன் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து கார் கதவுகளை உடைத்து சிறு குழந்தைகளையும் காரில் சிக்கி இருந்தவர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளனர்.  மேலும் ஒரு சிறுவன் உள்பட நான்கு பேர் மணப்பாறை அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் பயணம் செய்தவர்கள்,  பலியானவர்கள் குறித்து விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.  தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in