தடுப்பு வேலியில் கார் மோதி கவிழ்ந்து விபத்து: விசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ உள்பட 3 பேர் பலி

விபத்து
விபத்து

திருப்பதியில் வழக்கு விசாரணைக்குச் சென்ற சார்பு ஆய்வாளர் உள்பட 3 பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில காவல்துறையினர் வழக்கு விசாரணை ஒன்றிற்காக ஆறுபேர் காரில் ஆந்திர மாநிலம் திருப்பதிக்குச் சென்றனர். வழக்கு விசாரணை முடிந்து, மீண்டும் கர்நாடகா மாநிலம் நோக்கி இன்று அதிகாலை 4.30 மணிக்கு சித்தூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். பி.கொத்தக்கோட்டை அருகே வந்தபோது அப்போது சாலையில் இருந்த தடுப்பு வேலியில் மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த சார்பு ஆய்வாளர் அவினாஷ், காவலர் அணில், கார் ஓட்டுனர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் காரில் இருந்த 3 போலீஸார் படுகாயம் அடைந்து திருப்பதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சித்தூர் எஸ்.பி நிஷாந்த் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார்.

வழக்கு விசாரணைக்குச் சென்ற காவலர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in