`எங்க காட்டேஜில் ஜாலியாக இருக்க அழகான பெண்கள் இருக்காங்க'- வியாபாரியை பதறவைத்த 3 பேர் சிக்கினர்

`எங்க காட்டேஜில் ஜாலியாக இருக்க அழகான பெண்கள் இருக்காங்க'- வியாபாரியை பதறவைத்த 3 பேர் சிக்கினர்

மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் மற்றும் விடுதி உரிமையாளர் உள்ளிட்ட மூவர் போலீஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீலகிரி மாவட்டம், எம்.பாலடா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சந்தோஷ் (38). இவர் தான் சாகுபடி செய்துள்ள  காய்கறிகளை மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து நேற்று  விற்பனை செய்தார்.  களைப்பாக இருந்ததால் மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் உள்ள தனியார் விடுதியில்  தங்கி ஓய்வெடுத்து விட்டு செல்லலாம் என்று அறை எடுத்தார். 

அப்போது அவரிடம் எங்க காட்டேஜில் ஜாலியாக இருக்க அழகான பெண்கள் உள்ளனர் என காட்டேஜ் உரிமையாளர் கூறியதாக கூறப்படுகிறது. இதைவிரும்பாத சந்தோஷ், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான  போலீஸார்  சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

போலீஸாரின் சோதனையில் அங்கிருந்த பெண், லாட்ஜின் உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் ராஜ்சுந்தர் (31) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு இன்று ஆஜர் செய்தனர். ராஜ்குமார் மற்றும் ராஜ் சுந்தரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணை கோவை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in