குடிபோதையில் டூவீலரில் மோதிய லாரி ஓட்டுநர்: ஊராட்சி மன்ற தலைவர் மகள் உள்பட மூவர் உடல் நசுங்கி பலி

குடிபோதையில் டூவீலரில் மோதிய லாரி ஓட்டுநர்: ஊராட்சி மன்ற தலைவர் மகள் உள்பட மூவர் உடல் நசுங்கி பலி

விருத்தாசலம் அருகே இரு சக்கர வாகனத்தின்மீது  லாரி மோதியதில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்த தொரவளூர் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா அருளரசன். இவர்களின் மகள் ஓவியா (15) விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஓவியாவின் பெற்றோர், மேல்மருவத்தூர் கோயிலுக்குச் சென்றிருந்தனர்.  அதனால் பள்ளி சென்றிருந்த ஓவியாவை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு அதே ஊரை சேர்ந்த  உறவினரான குமாரசாமி டூவீலரில் தொரவளுர் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் பேரன் தரும் என்ற சிறுவனும் உடனிருந்தான். 

அப்போது நெய்வேலியில் இருந்து சாம்பல் ஏற்றிக்கொண்டு, கோவை நோக்கி சென்று  கொண்டிருந்த லாரி , கோமங்களம்  அருகே இவர்கள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.  இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று  பேரும் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தனர். 

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக விருத்தாச்சலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர்  உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை, வேப்பூரில் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.லாரியை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் மணிகண்டனை பிடித்த காவல்துறையினர்,  அவர் அதிக மது போதையில் இருப்பதை அறிந்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.  மேலும்  இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர்  வழக்குப் பதிந்து ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்துள்ளனர். லாரி மோதி மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in