கடையைப் பூட்டிச் சென்ற வாலிபர் மாயம்… எரிந்த நிலையில் எலும்புக்கூடாக மீட்பு: போலீஸிடம் சிக்கிய மூன்று பேர்!

கடையைப் பூட்டிச் சென்ற வாலிபர் மாயம்… எரிந்த நிலையில் எலும்புக்கூடாக மீட்பு: போலீஸிடம் சிக்கிய மூன்று பேர்!

வந்தவாசி அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் வியாபாரியின் மகனை எரித்துக் கொன்ற மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சு.நாவல்பாக்கம் பகுதியில் உள்ள குளத்தில் எரிந்த நிலையில் எலும்புக்கூடுகள் இருப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் தெள்ளார் போலீஸாருக்குத் தகவ் தெரிவித்தனர். இதன் பேரில் போலீஸார் அங்கு விரைந்து சென்று எலும்புக்கூடுகளைச் சேகரித்தனர். அப்போது அங்கு இருந்த கடை சாவி மற்றும் டூவீலர் சாவியும் போலீஸாரால் மீட்கப்பட்டது.
போலீஸார் தீவிர விசாரணையில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக் கிடந்தவர் வந்தவாசியை அடுத்த நல்லூரைச் சேர்ந்த மளிகை கடை வியாபாரி ஏழுமலையின் மகன் விஜய் (22) என்பது தெரிய வந்தது. கடந்த 12-ம் தேதி இரவு கடையை மூடிவிட்டுச் சென்ற விஜய் காணாமல் போனதும் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீஸார் விசாரித்த போது கொடுக்கல் , வாங்கல் தகராறில் விஜய் எரித்துக் கொலை செய்யப்பட்டதும், அவரது டூவீலர் அருகே உள்ள கிணற்றுக்குள் வீசப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து விஜயின் டூவீலரை வெளியே எடுத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மொய்தீன்(57), நாராயணசாமி(32), வரதம்(41) ஆகியோரை இன்று போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in