லாரி, கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பிய 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

லாரி, கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பிய 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அருகேயுள்ள கீரம்பாடியைச் சேர்ந்தவர் முத்து ராஜேந்திரன். இவர் மதுரையில் உள்ள தனது உறவினர் ஒருவரின் இல்லத்தில் நிகழ்ந்த துக்க சம்பவத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று தனது காரில் சென்றிருந்தார். அவருடன் அவர் மனைவி சாந்தி மகன் முத்துராஜா ஆகியோர் சென்றனர் காரை முத்துராஜா ஓட்டிச் சென்றார். துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு இன்று அதிகாலை அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிப் பகுதியில் ஞானோதயம் கிராமம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனால் காரில் வந்த மூவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் இடிபாடுகளை அகற்றி மூவரது உடல்களையும் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை ,மகன் ஆகிய மூவர் உயிரிழந்திருப்பது ராணிப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in